பிறந்தவுடன் தரையில் விழுந்த குழந்தை: மருத்துவமனை மீது வழக்கு தொடுக்க தாயார் முடிவு..!!

Read Time:3 Minute, 11 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90கனடா நாட்டில் கவனக் குறைவு காரணமாக தன்னுடைய குழந்தை தரையில் விழுந்ததை கவனிக்க தவறிய மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடுக்க தாயார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Belleville நகரில் Kelsey Bond என்பவர் வசித்து வந்துள்ளார்.

கர்ப்பிணி என்பதால் அருகில் உள்ள பொது மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், 11 மாதங்களுக்கு முன்னதாகவே இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

மேலும், குழந்தைகள் பிறந்ததும் சில நாட்கள் மருத்துவமனை பராமரிப்பில் இருக்க வேண்டும் என்பதால் அவர் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.

இரட்டை குழந்தைகளை பராமரிக்க செவிலியர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஒரு நாள் ஆண் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு செவிலியர் ஒருவர் உணவு ஊட்டிக்கொண்டு இருந்துள்ளார்.

அதே நேரம் வேலைப்பளு காரணமாக திடீரென செவிலியப் பெண் கண் அயர்ந்து தூங்கியுள்ளார்.

அப்போது, செவிலியரின் மடியில் படுத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. மேலும், குழந்தையின் தலை தரை மீது பலமாக மோதியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தாயார் பேசியபோது, ‘செவிலியரின் கவனக் குறைவுக் காரணமாக தான் எனது குழந்தை தரையில் விழுந்தது.

குழந்தைக்கு தலையில் அடிப்பட்டுள்ளதால் இதனால் குழந்தைக்கு எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும் என அச்சமாக உள்ளது.

சரியான கண்காணிப்பு இல்லாத அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தாயார் கூறியுள்ளார்.

தாயாரின் கருத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அதில், ‘மருத்துவமனையில் குழந்தை கீழே விழுந்தது எப்படி என்பது குறித்து ஆதாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.

இங்கு பணிபுரியும் செவிலியர்கள் 12 மணி நேரம் தொடர்ந்து பனியாற்றுவதால் அசதியின் காரணமாக இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம்.

மேலும், தங்களின் நிர்வாகம், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அர்த்தம் பொதிந்ததும் ஆபத்துகள் நிறைந்ததுமான அழைப்பு..!! (கட்டுரை)
Next post தவறான உறவு: மாமனாரை கொலை செய்த மருமகள்..!!