காரில் இருந்து குதித்து தப்பிய பெண்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 15 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90இளம் பெண் ஒருவர் தான் கடத்திக்கொண்டு செல்லப்பட்ட நிலையில் காரின் டிக்கியை உதைத்து அதன்பின்னர் குதித்து ஓடிய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இளம் பெண் 25 வயது மதிக்கத்தக்கவர் கடந்த கடந்த செவ்வாய் கிழமை இரவு அமெரிக்காவின் அலபாமா பகுதியில் தன்னுடைய காரில் சென்றுள்ளார்.

அவ்வேளை மர்ம நபர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, மொபைல் போன் மற்றும் கையில் இருந்த வால்லெட் போன்றவைகளை மிரட்டி வாங்கியுள்ளனர்.

அதன் பின் அப்பெண்ணை காரின் பின்னால் உள்ள டிக்கியில் வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த நபர் அருகே உள்ள செண்டரில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சென்றுள்ளார்.

இதன்பின்னர் செண்டரில் இருந்து வெளியே வந்த அந்த நபர் காரை எடுத்து சென்ற போது, காரின் டிக்கியில் இருந்த கடத்தப்பட்ட பெண் டிக்கியை உதைத்து, ஓடும் காரில் இருந்து வெளியே குதித்து, அருகே இருந்த செண்டரில் சென்று, உரிமையாளரிடம் உதவி கோரியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கடை உரிமையாளர் அப்பெண்ணை கடையில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் தெரிவித்திருப்பதாவது, குறித்த நபர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு வந்ததாகவும், ஆனால் அதிக அளவு பணம் எடுக்க முயற்சி செய்தார்.
ஆனால் முடியவில்லை, அதனால் அவர் சென்றுவிட்டார். மேலும் அவரின் பையில் துப்பாக்கி இருந்ததைக்கண்டு தான் சந்தேகமடைந்ததாகவும், அதே போன்று இப்பெண் அங்கிருந்து ஓடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதில் ஒருவர் மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது வேறு யாரேனும் உள்ளார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதில் அப்பெண்ணுக்கு அதிக அளவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்: அதிர்ச்சி வீடியோ..!!
Next post உதடு வெடிப்பு அதிகமா இருக்கா தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..!!