`அம்மா’ என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி..!!

Read Time:1 Minute, 36 Second

201703230743154657_Sridevi-feature-in-the-title-of-Mom_SECVPFதன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஒய்வு கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்‌ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘மாம்’ படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வரும் ஜூலை மாதம் 14ம் தேதி உலகமெங்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!
Next post ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு..!!