ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு..!!

Read Time:5 Minute, 47 Second

201703221132151668_instant-idli-flour-health-problem_SECVPFகாலை உணவுக்கு சிறந்த, ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான். இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது.

ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்…

முன்பெல்லாம் ஆட்டாங்கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்த பின் ஆட்டாங்கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின்புறத்தில் குப்பையாக தான் கிடைக்கிறது.

ஆட்டாங்கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் இருந்தது. ஆனால், கடைகளில் விற்க அவர்கள் பயன்படுத்தும் பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?

மாவு ஆட்டும் போது, அதன் பிறகு கிரைண்டரை கழுவும் போதும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஈகோலி எனும் பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மாவாட்டும் போது இட்லி, தோசை மாவில் அடைக்கலம் புகுந்துவிடுகிறது.

இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தால் நாள்ப்பட்ட வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் எண்ணலாம், தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று… இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில் வாங்கும் இட்லி மாவு தான். ஈகோலி எனும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட முழுமையாக அழிவதில்லை என்பது தான் சோகமே.

கடைகளில் வாங்கும் மாவினால் தான் இந்த பிரச்சனைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நாம் வாங்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு அதுக்கும் மேல ராகம்.

கடைகளில் நாம் வாங்குகிற மாவு பாக்கெட்டுகள் பல விதங்களிலும் சந்தேகத்துக்குரியவையே.முதலாவதாக, அரிசியின் தரத்திலேயே கடைக்காரர்கள் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வாய்ப்பு உண்டு. அரிசியில் கல் இருந்தாலோ, புழு இருந்தாலோ நீக்கிவிட வேண்டும்… அரிசியை சுத்தமாகக் கழுவ வேண்டும். கிலோ கணக்கில் அரிசியைக் கொண்டு மாவு அரைக்கிறவர்கள் இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருக்க நிறைய வாய்ப்புண்டு. இதேபோல, உளுத்தம்பருப்பிலும் தரம் குறைந்ததைப் பயன்படுத்தலாம்.

முக்கியமாக எந்த அளவு சுகாதாரமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், எந்த மாதிரியான இடங்களில் தயாரிக்கிறார்கள், மாவு அரைக்கிற பாத்திரங்களின் சுத்தத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறார்களா என்பதும் கேள்விக்கு உரியதுதான். வீட்டில் மாவு அரைத்த பிறகு கிரைண்டரை கழுவி காய வைத்த பிறகுதான், அடுத்த முறை பயன்படுத்துவோம். ஆனால், அவர்கள் தினமும் பயன்படுத்துவதால் முறைப்படி காய வைத்த பிறகு மாவு அரைப்பதற்கும் வாய்ப்பு குறைவு.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெடாது, புளித்து போகாது. ஆனால், இதன் காரணத்தால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

காசுக் கொடுத்து உடல்நலக் கோளாறுகள், ஆரோக்கியமின்மை போன்றவற்றை விலைக்கு வாங்க வேண்டுமா? அரை மணிநேரம் செலவிட்டால் இட்லி மாவு வீட்டிலேயே அரைக்கலாம். நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத்துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `அம்மா’ என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி..!!
Next post இந்த 10 விஷயத்த மனைவி உங்கக்கிட்ட இருந்துதா கத்துப்பாங்கன்னு தெரியுமா?..!!