ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 34 Second

201703231027337829_No-one-support-in-RK-Nagar-Election-Rajinikanth_SECVPFமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி, சீமான், சமத்துவ மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பாஜக அணி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, ஆசி பெற்றார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் தன்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன் என்றும் கூறினார்.

இதையடுத்து, ரஜினிகாந்த் பாஜக-வை ஆதரிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், வரும் தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணொருவரின் கருப்பையில் 10 குழந்தைகளுக்கு சமமான இராட்சத கட்டி..!! (படங்கள்)
Next post காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை..!!