கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கர்ப்பிணி அடித்துக்கொலை?..!!!

Read Time:2 Minute, 54 Second

201704022206537324_pregnant-woman-killed-police-investigation-cellphone-company_SECVPFஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் ஜெயங்கொண்டத்தில் ஒரு தனியார் செல்போன் சிம்கார்டு விற்பனை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோயிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் ஆனந்தி (22) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஆனந்தி ஆசிரியை பயிற்சி படித்து விட்டு வேலைக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் ஆனந்தி கர்ப்பம் அடைந்தார். 3 மாத கர்ப்பிணியான அவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோரிடம் கூறி ஆனந்தி வேதனைப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ஆனந்தராஜ் குடும்பத்தினர் சிதம்பரத்தில் உள்ள ஆனந்தியின் பெற்றோருக்கு போன் செய்து ஆனந்தி தற்கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.

உடனே ஆனந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூரியமணல் கிராமத்திற்கு வந்தனர். ஆனந்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது ஆனந்தியின் கழுத்தில் காயம் இருந்ததால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஆனந்தியின் தந்தை சீனிவாசன் ஆனந்தராஜூக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தனது மகளுக்கும், ஆனந்தரா ஜூக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாவும் அதில் கூறியுள்ளார்.

மேலும் தனது மகளை ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும் அந்த புகாரில் கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கணவர் ஆனந்தராஜ் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணிப் பெண் திருமணமான 5 மாதத்தில் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம நபர்கள் தாக்கியதில் பிரபல நடிகர் பார்வை இழக்கும் நிலையில்..!!
Next post தயாரிப்பாளர் சங்க தேர்தல்: பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றிய விஷால் அணி..!!