பிரித்தானிய மாணவி இஸ்ரேலில் கொடூரமாக குத்தி கொலை: புனித வெள்ளி அன்று பயங்கரம்..!! (வீடியோ)
பிரித்தானிய மாணவி ஒருவர் இஸ்ரேலில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் Jerusalem பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக குத்தி தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனிறி இறந்துவிட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இது ஜெருசலம் பகுதியில் நடந்ததாகவும், இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஒரு பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரை உடனடியாக கைது செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தால், இறந்த பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் என்றும் அவரின் பெயர் Hannah Bladon என்றும் கூறியுள்ளனர்.
அவர் இஸ்ரேலுக்கு விடுமுறைக்காக வந்துள்ளார் என்று முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அங்கிருந்து கிடைக்குக் தகவல்கள் கூறுகையில், இது ரெயிலில் நடந்ததாகவும், அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணை பல முறை குத்தியதாகவும், இதில் இரண்டு பெண்களும் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது.
அவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு வயது 57 இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating