விதியின் விளையாட்டு! கூடிப் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்..!!
அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து Mississippi Herald என்னும் நாளிதழில் வெளியான செய்தியின் விவரங்கள் பின்வருமாறு..
மிசிசிப்பியில் 1984ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்து விட்டார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரட்டை குழந்தைகள் விபத்தில் பிழைத்து கொண்டன.
அந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையை ஒரு குடும்பமும், பெண் குழந்தையை மற்றொரு குடும்பமும் தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.
இருவருக்குமே தாங்கள் யார் என்பது தெரியாது. அப்படி இருக்க ஒரே கல்லூரியில் இருவரும் சேர்ந்து படிக்கும் சூழல் ஏற்படுகிறது.
தாங்கள் இரட்டையர்கள், ஒரே பெற்றோருக்கு பிறந்தவர்கள் என்பது தெரியாமலேயே இருவரும் காதலிக்க தொடங்கி விட்டனர்.
திருமணமும் முடிகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதால் ஜாக்சன் என்னும் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர்.
ஜாக்சன் இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்த போது இருவரும் அவர்கள் இரட்டையர்கள் என்பது தெரிய வருகிறது.
மருத்துவ முடிவை அந்த ஆண் தனது மனைவியிடம் கூறிய போது, அந்த பெண் அதனை நம்ப மறுத்து விட்டார்.
இந்த வினோதமான சம்பவத்தை ஊடகங்களிடம் மருத்துவர் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
அந்த தம்பதியின் பெயர்கள் மற்றும் புகைப்படத்தை குறிப்பிடாமல் இந்த சம்பவத்தை மட்டும் விவரித்துள்ளார் ஜாக்சன்.
தற்போது அந்த தம்பதியினர், இணைந்து வாழ்வதா பிரிவதா? என்னும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்!
Average Rating