போடி அருகே கள்ளக்காதலை கணவன் கைவிட மறுத்ததால் மனைவி தற்கொலை..!!

Read Time:1 Minute, 17 Second

201704161731076643_wrong-relationship-husband-and-wife-refused-to-abandon_SECVPFதேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமாயன். அவரது மனைவி ரமாதேவி (வயது 29). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் சின்ன மாயனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ரமா தேவி தனது கணவரிடம் தட்டிக் கேட்டார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரமா தேவி தாக்கப்பட்டார். ஆனால் சின்னமாயன் கள்ளத் தொடர்பை கைவிட வில்லை. இதனால் மனமுடைந்த ரமா தேவி தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து போடி தாலுகா போலீசில் ரமா தேவியின் தந்தை சின்னசாமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு..!!
Next post போராளிகளை காட்டி தப்பிக்க முயலும் அரசு..!! (கட்டுரை)