காண்டம் விளம்பரத்தால்… சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்..!!

Read Time:1 Minute, 43 Second

728x410_9212_sunny-leone-333x250பெரும்பாலான காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சன்னி லியோன் தற்போதும் ​ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளார்.

சன்னி லியோன் நடித்துள்ள காண்டம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதற்கு ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த விளம்பரத்தில் சன்னி லியோன் வெளிப்படுத்தும் ஆபாச செய்கையை வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரான ஷீலா கங்கர்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விவகாரத்தை மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் குறிப்பிட்ட காண்டம் விளம்பரத்தில் சன்னி லியோனின் ஆபாச செய்கை இந்திய கலாச்சாரத்திற்கு புறம்பானது. அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில மகளிர் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்படும் என்று ஷீலா கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொதிக்கும் எண்ணெய்யினை என்மேல் ஊற்றினார்கள்! நெகிழ வைக்கும் திருநங்கையின் கதை..!!
Next post பாட்டுப் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை கோடரியால் வெட்டிச் சாய்த்த சகோதரர்..!!