அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்..!!

Read Time:2 Minute, 34 Second

201704201232012926_Ishara-Nair-reduce-weight-in-10-days-for-Adhi-Medhavigal_SECVPFசதுரங்க வேட்டை’ படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இப்படத்தில் இவர் நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றவர். இவர் தற்போது ‘அதி மேதாவிகள்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி வருகிறார். ‘மோ’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இஷாரா நாயர் கூறும்போது, நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் என்னுடைய புதிய கதாபாத்திரத்திற்கு இருக்க கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து தேர்வு செய்த திரைப்படம் தான் ‘அதி மேதாவிகள்’. இந்த படத்தில் சுஜி என்கின்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கின்றேன். இரண்டு நண்பர்கள் தங்களின் கல்லூரியில் வைக்கும் அரியர்ஸ் பற்றியும், அந்த அரியர்ஸை கடந்து வர அவர்கள் எடுக்கும் முயற்சிகளும்தான் ‘அதி மேதாவிகள்’ படத்தின் ஒரு வரி கதை.

இந்த படத்திற்காக என்னை உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையை குறைத்தேன். மற்ற எல்லா படங்களில் இருந்தும் எங்களின் ‘அதி மேதாவிகள்’ படம் தனித்து விளங்கும்.

காதல் இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே எங்கள் ‘அதி மேதாவிகள்’ படம் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றேன்” என்று உற்சாகமாக கூறினார். இப்படத்தை ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது..!!
Next post காதலியின் கண் முன்னால் உயிரிழந்த காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!