காதலியின் கண் முன்னால் உயிரிழந்த காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!
பிரேசில் நாட்டில் செல்பி எடுத்தபோது கடல் அலை அடித்துச்சென்றதில் காதலியின் கண் முன்னால் காதலன் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த Leonardo Santos(25) மற்றும் Amanda Marie Roque(19) என்ற காதல் ஜோடி பிரேசில் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
பிரேசிலில் உள்ள Farol de Santa Marta என்ற கடற்கரைக்கு சில தினங்களுக்கு முன்னர் இருவரும் சென்றுள்ளர். இவர்களுடன் உறவினர் ஒருவரும் சென்றுள்ளார்.
இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடலில் குளித்துவிட்டு செல்பி எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடற்கரையில் இருந்த பாறை மீது இருவரும் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
அப்போது திடீரென பாய்ந்த வந்த கடல் அலை ஒன்று இருவரை அடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இக்காட்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்த உறவினர் ‘காப்பாற்றுங்கள்…காப்பாற்றுங்கள்’ என அலறியுள்ளார்.
வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த சிலர் கடலில் குதித்து இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
ஆனால், அவருடைய காதலனை கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.
கடற்கரை முழுவது 4 நாட்களாக தேடிய பிறகு மற்றொரு இடத்தில் காதலன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அலை அடித்தபோது நபரின் தலை பாறையில் அடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செல்பி எடுத்தபோது காதலி கண் முன்னால் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating