`விஜய் 61′ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு: முழு தகவல்..!!

Read Time:3 Minute, 17 Second

201704230503003850_Full-update-of-the-Vijay-61-including-release-date_SECVPFவிஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முக்கிய தளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர், நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள்
ஐரோப்பாவில் படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுவதால், இப்படத்திற்கு `மூன்று முகம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்ன? பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்தநதளான ஜுன் 22-ஆம் தேதி வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் `2.0′ ஜனவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. எனவே `விஜய் 61′ படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ..!! (18+)
Next post மகனை விட்டு மருமகள் பிரிந்ததால் மாமியார் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!