மகனை விட்டு மருமகள் பிரிந்ததால் மாமியார் விஷம் குடித்து தற்கொலை..!!
கோவை மாவட்டம் கோலன் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயி. இவரது மனைவி அனுசியா தேவி (வயது 48). இவர்களது மகன் அருண் பிரசாத் (26).
கடந்த 10-ந் தேதி அருண் பிரசாத்துக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சியாமளா என்ற பெண்ணும் திருமணம் நடந்தது. ஆனால் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சியாமளா அருண் பிரசாத்தை பிரிந்து தூத்துக்குடிக்கு சென்றார். தனது மருமகள் மகனை பிரிந்து சென்றதால் அனுசியா தேவி மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனுசியா தேவியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating