இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி 5 பேரைக் காணவில்லை.
யுத்த பீதியில் தஞ்சம் கோரி இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தும் ஐவர் காணாமல் போய்யுள்ளனர். இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பி, நீந்தி, இந்தியக் கடற்பரப்பில் உள்ள சிறிய தீவு ஒன்றில் கரை சேர்ந்த 9 பேரை இந்திய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நிவாஷினி கந்தசாமி(வயது21), புவனவதி மோகன்(வயது40), நவமணி(வயது65), இராதுஷா(வயது14) மற்றும் கோவிந்தசாமி(வயது75) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
நேற்று பிற்பகலில் மன்னார் பேசாலைப்பகுதியில் இருந்து புறப்பட்ட இவர்களது கண்ணாடி இழைப்படகு கடுமையான காற்று காரணமாக நள்ளிரவில் கடலில் மூழ்கியதாகவும், நீந்தத் தெரிந்த 9 பேர் மாத்திரம் கரைசேர, 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 5 பேரைக் காணவில்லை என்றும், இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating