நான் வசிக்கும் சுவிஸ் நகரம்: இலங்கை தமிழ் பெண் வெளியிட்ட வீடியோ..!!

Read Time:3 Minute, 47 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தான் வசிக்கும் நகரில் சந்திக்கும் அற்புதமான அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இலங்கையை சேர்ந்த பெற்றோர் இருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

பேர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal நகரில் குடியேறிய இவர்களுக்கு கடந்த 1988-ம் ஆண்டு Tama Vakeesan என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. சுவிஸில் வங்கி ஒன்றில் பணிபுரியும் இந்த இளம்பெண்ணிற்கு தற்போது வயது 28.

இலங்கையின் பூர்வீகத்தை மறக்காத இப்பெண் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளின் பெருமைகளை கூறி வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் வசித்து வரும் Langenthal நகரின் சிறப்புக்களை பற்றி விரிவாக கூறியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சுவிஸ் மற்றும் ஜேர்மன் மொழியை இவர் மிகவும் சரளமாக பேசுவது சுவிஸ் குடிமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில் பனிப்பொழியும் நேரத்தில் வெளியே சென்று சாலையில் நடந்தவாறு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இதன் ஒருப்பகுதியாக இவர் பெற்றோருடன் தங்கியிருக்கும் வீட்டை காட்டுகிறார்.

பேருந்தில் ஏறி பயணம் செய்கிறார். பின்னர், சிறு வயதில் அவர் பயின்றி பள்ளியை காட்டுகிறார்.

இக்காட்சிகள் முடிந்ததும் மெக்டொனால்ட் உணவகத்திற்கு செல்கிறார்.

’இந்த நகரில் இருக்கும் ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு தமிழன் பணி செய்துக்கொண்டு இருப்பார். இந்த மெக்டொனால்ட் உணவகத்திலும் ஒரு தமிழன் இருக்கிறார்’ எனக் கூறிக்கொண்டு உள்ளே செல்கிறார்.

உணவகத்திற்குள் சென்றதும் ’அண்ணா, எப்படி இருக்கிறீர்கள்’? என ஒருவரை பார்த்து தமிழில் கேள்வி எழுப்ப, அவர் ‘சுகமாக இருக்கிறேன்’ என தமிழில் பதிலளிக்கிறார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டவர் Coop என்ற மற்றொரு உணவகத்திற்கு செல்கிறார். அங்கு ‘ஹாய் குமார் மாமா எப்படி இருக்கறீர்கள்’ என ஒருவரை பார்த்து கேள்வி கேட்கிறார்.

இதற்கு அந்த நபர் சுவிஸ் மொழியில் பதிலளிக்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு இடமாக சுற்றிக்காட்டிய பிறகு தனது வீட்டிற்கு சென்றதும் பயணத்தை முடித்துக்கொள்கிறார்.

முன்னதாக, இனிவரும் அடுத்தடுத்த வீடியோக்களில் தான் வசிக்கும் நகரத்தின் பிற பெருமைகளை இலங்கை கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு வீடியோவாக வெளியிட உள்ளதாக Tama Vakeesan தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல வில்லன் நடிகர் மரணம் – மனைவியால் அடைந்த துக்கம்..!!
Next post நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை பலி: 3 பேர் படுகாயம்..!!