செக்ஸ் டார்ச்சர் நடிகை மாளவிகா ஓட்டம்

Read Time:4 Minute, 11 Second

Ôகார்த்தீகைÕ பட தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார் மாளவிகா. சினிமாவில் பிசியாக இருந்தபோதே தொழிலதிபர் சுமேஷை காதலித்து மணந்தார் மாளவிகா. திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் 5 மாத கர்ப¢பமாக இருக்கிறார். இதனால் புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொண¢ட Ôகார்த்தீகைÕ படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமாதித்யா, சமிக்ஷா நடிக்கின்றனர். வீரா இயக்குகிறார். தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற இருந்தது. அதற்காக மாளவிகா சென்னை வந்திருந்தார். படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அவர் நடிக்க மறுத்தார். இயக்குனர் வீரா, அவரிடம் காரணத்தை கேட்டபோது, “தயாரிப்பாளர் டார்ச்சர் தருகிறார். கடினமான நடன அசைவுகளில் என்னால் நடிக்க முடியாது என்றேன். அதற்கு வயிறை காட்டு. நீ கர்ப்பமா என பார்க்கிறேன் என கீழ்தரமாக பேசுகிறார்” என மாளவிகா தெரிவித்த¤ருக்கிறார். இதையடுத்து அவர் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிவிட்டார். இது குறித்து படத்தின் இயக்குனர் வீரா, கூறியதாவது: படத்தை தொடங்கும்போது மாளவிகா கர்ப்பமாக இல்லை. இன்னும் 15 நாட்கள் அவர் நடித்து தரவேண்டும். அதற்காகத்தான் நேற்றுமுன்தினம் அவர் படப்பிடிப்புக்கு வந்தார். தயாரிப்பாளர் அவரிடம் முறை தவறி பேசியிருக்கிறார். அதற்காக நானே தயாரிப்பாளரை அழைத்துச் சென்று, மாளவிகாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தேன். இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் மாளவிகா புகார் தெரிவித்தார். நானும் நடந்ததை சரத்திடம் தெரிவித்தேன். அத்துடன் இப்பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால் மாளவிகா திடீரென மும்பை சென்றுவிட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இப்படத்துக்கு ரூ. 4 கோடி செலவிடப்படுகிறது. மாளவிகாவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுளளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிப்போம். இவ்வாறு வீரா கூறினார்.

மாளவிகா கூறுகையில், “படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் கேரவனில் தனியாக அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, பேசிக்கொண்டே என்னை தொட முயன்றார். “தொடாதே. எழுந்து போ” எனறேன். “நீ கர்ப்பம் என்கிறாயே. வயிறைக் காட்டு பார்க்கிறேன்” என்றார். உடனே அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

மிகவும் அழுதேன். தொடர்ந்து நடிக்க முடியாததால் மும்பை வந்துவிட்டேன். ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுள்ளனர். அதனால் இப்போதைக்கு அந்த படத்தில் நடிக்க முடியாது. ஒரு வருடம் கழித்துதான் நடிப்பேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டிவனம் பாமக நகராட்சித் தலைவர் திமுகவுக்கு தாவல்!
Next post இத்தாலியில் கைதான புலிச் சந்தேகநபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களே!!