நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை..!!

Read Time:3 Minute, 10 Second

நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை மட்டும் தான். ருசி, வாசனை, தொடு உணர்வு, சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்த நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

வளர்ந்த மனிதனின் மூளை எடை 1½ கிலோ. ஒவ்வொரு வினாடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன. நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளும். மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன.

பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.மூளை கோடிக்கணக்கான தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது. 18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மனித உடலில் உள்ள ரத்தத்திலும், ஆக்சிஜனிலும் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்துகிறது. மனித மூளை மணிக்கு 431 கி.மீ. வேகத்தில் செயல்படக் கூடியது. வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும், பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரோஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் பெண்கள் அதிக ஞாபகசக்தியோடு இருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு கனவு காணுவதில்லை என்று சொல்வதுண்டு.

உண்மையில் கனவு தான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும் போது தான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம். நாம் சிரிக்கும் போது நம் மூளையின் வெவ்வேறு ஐந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. இடதுகை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி, வலதுகை பழக்கம் கொண்டவர்களை விட 11 சதவீதம் பெரிதாக இருக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சிப்படி மூளையை கசக்கிப் பிழியும் டாப் 3 டென்ஷனான வேலைகள் என்றால் அவை அக்கவுன்டன்ட், நூலகர், டிரக் டிரைவர் வேலைகள்தானாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளையை முட்டும் கன்னுக்குட்டி: பிஞ்சுலையே பழுத்த சிறுவன்..!! (வீடியோ)
Next post கிறிஸ்துமஸ் தினத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்- எதற்கு இப்படி செய்தார்?..!!