புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி..!!

Read Time:3 Minute, 8 Second

அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடிய ஓர் அற்புதமான பழம் பப்பாளி. சருமத்தை அழகுபடுத்தும் குணத்தைத் தாண்டி பப்பாளிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதனின் சத்துகளை முழுமையாக பெற முடியும். நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது.

பப்பாளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் (ANTI OXIDANTS), புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும் மேலும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும்.

மலச்சிக்கல்ப

ப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும்.

சக்கரை நோய்ப
ப்பாளி விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் (ANTI OXIDANTS) இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தம்ப

ப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) கொண்டவர்கள், பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் எடை குறைய

குறைந்த கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் எடை வெகுவாக குறையும்.

சளி, இருமலை தடுக்க

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.

இரத்ததை அதிகரிக்க

பப்பாளி ஆண்களுக்கு மிகச்சிறந்த பழம். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.ஆண்கள் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், விரைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்..!!
Next post 1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்: வெளியான பகீர் வீடியோ..!!