1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்: வெளியான பகீர் வீடியோ..!!

Read Time:2 Minute, 41 Second

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இவ்வுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை நிலவி வந்தது.

ஆகையால் அரசர்களின் சடலங்கள் பாதுகாக்கப்பட்டன. உடலிலிருந்து நுரையீரல் (Lungs), கல்லீரல் (Liver), குடல் மற்றும் மூளை ஆகியவற்றை உடம்பிலிருந்து நீக்கிவிடுவார்கள்.காரணம், இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்துவிடும். இதில் ஆச்சரியமான விஷயம் இதயத்தை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஏனெனில் உடலின் மொத்த இயக்கம், சிந்தனை, ஞாபகம் போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பி வந்தனர்.இவையெல்லாம் இதயத்தின் செயல் அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

வெளியே எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம் (மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்துவிடுவார்கள்.இதன் பிறகு உடலை, வேதிபொருளான நேட்ரான் (NATRON) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக உலறவைத்துவிடுவார்கள்.

இதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும், பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும்.பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள். இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசத்தினால் உடல் மூடப்பட்டுவிடும்.

அந்த வகையில் தான் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 1000 வருடங்களுக்கு முன்பு பதப்படுத்தி மண்ணில் புதைக்கப்பட்ட அரசனின் உடம்பை வெளியே எடுக்கும் வீடியோ என்று கூறப்படும் சமூக வலைதளத்தையே திணறடிக்கும் ஒரு காட்சி வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி..!!
Next post பிக்பாஸ் ஜூலி ஹீரோயி்னாக அறிமுகமாகும் படம்! ஹீரோ இவர்தான்..!!