`மாரி-2′ படத்துக்கு தயாராகும் தனுஷ்..!!

Read Time:1 Minute, 54 Second

`வடசென்னை’, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷ் பிசியாகி இருக்கிறார்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு தனுஷ் விரைவில் பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ்-ம் நடிக்கின்றனர். தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் பூஜை குறித்து படக்குழு அமைதி காத்து வந்த நிலையில், புத்தாண்டான நேற்று படத்தின் டைட்டில் லோகோ மற்றும் பூஜை குறித்த அறிவிப்பு வெளியாகியது.

அத்துடன் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்னல்களை மட்டுமே இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வுகள்..!! (கட்டுரை)
Next post நடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணம்! யாரு பார்த்த வேலை இது…?..!! (வீடியோ)