வெள்ளவத்தையிலும் புறக்கோட்டையிலும் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தல்

Read Time:1 Minute, 32 Second

கொழும்பில் இரண்டு இடங்களில் தமிழர் இருவர் நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் வெள்ளவத்தை கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அனுமதியை எதிர்ப்பார்த்திருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருளிஸ்வரன் நர்புதன் (வயது20) என்ற மாணவர் கடந்த 26ம் திகதிமுதல் காணாமல் போயுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இதேவேளை வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்த கைதடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வசீகரன் (வயது24) என்பவர் வெள்ளைவான் கும்பலால் நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்று பிரதியமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கதிரேசன் வீதியில் இவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்த சீருடை அணிந்த வெள்ளைவான் கும்பல் இவரை கடத்திச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருவேறு பஸ் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 60பேர் காயம்
Next post ஜயந்த விக்கிரமரத்ன இலங்கை பொலிஸ்மா அதிபராக ஜூலை 2ல் பதவியேற்பார்