இருவேறு பஸ் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 60பேர் காயம்
நாட்டில் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் மாணவ மாணவிகள் 15பேர் உட்பட 60பேர் படுகாயமடைந்தனர் கித்துல்கலையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்று எட்டியந்தோட்டை அலிவத்தை பகுதியிலுள்ள களனி ஆற்றுக்கருகில் தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த பாடசாலை மாணவ மாணவிகள் 15பேர் உட்பட 25பேர் படுகாயமடைந்தனர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களினால் காப்பாற்றப்பட்ட இவர்கள் யட்டியந்தோட்டை மற்றும் கருனல்ல ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர் இதேவேளை கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்று ஹ_ங்கம பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் 35பேர் படுகாயமடைந்த நிலையில் ஹ_ங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் இவ்விரு விபத்துக்கள் தொடர்பிலும் அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating