நேர்மறை எண்ணங்கள் ஆயுளை வளர்க்கும்!!

Read Time:2 Minute, 21 Second

மனம் போல வாழ்வு’ என்று கேள்விப்பட்டிருப்போம். இதற்கு மருத்துவரீதியாகவும் இப்போது அர்த்தம் கிடைத்திருக்கிறது.

‘மாரடைப்பு, பக்கவாதம், முச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற உயிரைப் பறிக்கும் அபாய நோய்கள் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்களுக்குப் பெரும்பாலும் வருவதில்லை’ என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். Harvard T.H. Chan School of Public Health செய்திருக்கும் இந்த ஆய்வு American Journal of Epidemiology இதழில் வெளியாகி இருக்கிறது.

இதேபோன்றதொரு ஆய்வு அமெரிக்காவிலும் ஏற்கெனவே நடந்துள்ளது. வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவர்கள் 6 ஆயிரத்து 959 பேரிடம் ஆளுமைத்திறன் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு நடந்த இந்த தேர்வில் நேர்மறை எண்ணங்களுடன் பதிலளித்தவர்களையும், எதிர்மறை கருத்துகளுடன் பதிலளித்தவர்களின் நிலையையும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்தார்கள். இவர்களில் 476 மாணவர்கள் பல்வேறு நோய்களால் மரணமடைந்திருந்தார்கள்.

இவர்களில் 42 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் எதிர்மறை எண்ணங்களுடன் பதிலளித்திருந்தவர்கள். இதன்மூலம் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்கிறவர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது என்று தங்கள் ஆய்வின் முடிவாகக் கூறியிருக்கிறார்கள். ஒரு டம்ளர் பாதி தண்ணீரால் நிரம்பியிருக்கிறது என்று நேர்மறையாகவும் சொல்லலாம். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்று எதிர்மறையாகவும் சொல்லலாம். இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?
Next post ஆதார் இல்லை என்பதற்காக சலுகைகள் மறுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!