இத்தாலியில் புலிகளின் பயங்கரவாதத்தை நிரூபிக்கும் தொலைபேசி பதிவுபத்திரங்கள் மீட்பு

Read Time:5 Minute, 51 Second

இத்தாலி நாட்டு அரசாங்கம் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக பட்டியலிட்டு அந்த அமைப்பையும் அதன் அனைத்து செயற்பாடுகளையும் தடை செய்யத் தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து இத்தாலி நாட்டுக்குள் அந்த அமைப்பின் அனைத்துச் செயற்பாடுகளுக்கு எதிராகவும் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் தீவிர பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி இத்தாலிய நாட்டின் அரசதரப்பில் நீதி, நிர்வாகம் சம்பந்தப்பட்ட அமைச்சின் நிதி விசாரணை வழக்குகளுக்கான பணிப்பாளர் றொசாறியோ கென்ரெல்லோ கடந்த 20 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தகவல் தெரிவிக்கையில் ; விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகத் தீர்மானித்து அந்த அமைப்பை இத்தாலி அரசு சட்டபூர்வமாகத் தடை செய்யத் தீர்மானம் எடுத்துவிட்டதாகவும் தொடர்ந்து அந்த அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை இத்தாலிய பயங்கரவாத தடுப்புப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு இத்தாலியில் புலிகள் இயக்கச் செயற்பாடுகள் தீவிரமாக நிகழ்ந்து வருவதாகக் கருதப்படும் முக்கிய நகரப் பகுதிகளில் இத்தாலி பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் தீவிர தேடுதல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்தாலியில் இயங்கிவந்த புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களைக் கைது செய்தது பற்றி செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இதுபற்றி மேலும் தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப இத்தாலி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முதல் தடவையாகக் கைது செய்யப்பட்ட 33 புலிகள் இயக்க நபர்களில் இத்தாலியில் புலிகள் இயக்கச் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டு வந்த உயர்மட்ட புலிகள் இயக்கத் தலைவர் ஒருவரும் மற்றும் பிரதித் தலைவர்களாகச் செயற்பட்ட நான்கு முக்கியஸ்தர்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் மற்றும் தொலைபேசித் தொடர்பு பதிவுகளிலிருந்து அவர்கள் இத்தாலியிலிருந்து ஸ்ரீலங்காவிலுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதத் தலைவர்களுடன் மேற்கொண்ட தொடர்புகளும் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக வழங்கிய ஆதரவு உதவிகள் பற்றிய விபரங்களும் தெரியவந்துள்ளதாக இத்தாலிய பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஸ்ரீலங்காவிலும் இத்தாலியிலும் புலிகள் இயக்கத்தினர் மேற்கொள்ளும் பயங்கரவாதச் செயற்பாடுகளை நிரூபிப்பதாக அமைந்துள்ளன என இத்தாலி நீதி விசாரணைப் பணிப்பாளர் றொசாறியோ கென்ரல்ரோ குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே புலிகளின் பயங்கரவாதத்தை நிரூபிக்கும் வேறு முக்கிய பத்திரங்களையும் இத்தாலியப் பொலிஸார் மேற்படி இத்தாலிப் புலிகள் இயக்கத்தலைவர் மற்றும் பிரதித் தலைவர்களிடமிருந்து கைப்பற்றினர். அவற்றுக்குள் புலிகள் இயக்கத்தின் ரி.ஐ.ஒ. எனப்படும் புலனாய்வுப் பிரிவு பற்றிய இரகசியத் தகவல்களைத் தெரிவிக்கும் பத்திரங்களும் இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கும் மற்றும் நிதி சேகரிக்கும் நபர்கள் பற்றிய பெயர்ப்பட்டியலும் அத்துடன் இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களின் பெயர்ப்பட்டியலும் இருப்பதாகவும் இவையெல்லாம் இத்தாலியில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளை நிரூபிக்கும் ஆவணங்களாக அமைந்துள்ளன எனவும் மேற்படி நீதி வழக்கு விசாரணைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்காகச் சேர்க்கப்படும் உதவி நீதிகள் அங்குவாழும் தமிழர்களிடமிருந்து பலாத்காரமாகப் பெறப்படும் பணம் அனைத்தும் அங்குள்ள சுவிஸ் வங்கியிலேயே இடப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி நாணயத் தாள்களுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது
Next post 70வயது பெண் இரட்டை குழந்தை பெற்று கின்னஸ் சாதனை படைத்தார்