மெக்சிகோ விபத்தில் 14 பேர் பலி
Read Time:59 Second
மெக்சிகோவின் சிகுவாகுவா நகரில் நடைபெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நகரின் முக்கிய சாலை ஒன்றில் பேருந்து ஒன்று பழுதாகி சாலையோரத்தில் நின்றது. அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் பழுதாகி நின்றது. இவ்விரு பேருந்துகளும் எந்தவிதமான எச்சரிக்கை விளக்குகளும் பொருத்தாமல் நின்றுகொண்டிருந்தன. இதைக்கவனிக்காமல் பின்னால் வேகமாக வந்த டிரக், பேருந்துகளின் மீது மோதியது. அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating