தொழிலாளர்களின் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்
Read Time:1 Minute, 27 Second
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு சார்பான தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து அரச ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும் திட்டமிட்டபடி ஜூலை 10ம்திகதி தொழிலாளர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லால்காந்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது அரசாங்கத்திற்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் சிலவற்றை இணைத்துக்கொண்டு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தில் சுமார் 366 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன தற்போதைய ஆய்வின்படி அரச தனியார் மலையக தொழிலாளர்கள் என 90சதவீதமானோர் ஜூலை 10ம்திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating