ஹிக்கடுவையில் இரவு விடுதி முற்றுகை.. முகாமையாளர் உட்பட இருவர் கைது
Read Time:1 Minute, 18 Second
ஹிக்கடுவையில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த இரவுவிடுதியொன்றை முற்றுகையிட்ட தென்பிரிவு குற்றத்தடுப்பு பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர் இந்த விடுதி குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு விடுதியை நடத்துவதற்கு அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை என முற்றுகை பொலிஸார் தெரிவித்தனர் இந்த விடுதியை முற்றுகையிட்டபோது ஆண்கள் பெண்கள் என சுமார் அங்கு ஆடியபடி மகிழ்ந்திருந்தனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர் விடுதியை சட்டவிரோதமாக நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என தென்பிரிவு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating