வளரும் நடிகைகள் மீது புகார் தருவதா? கண்ணடித்த நடிகை திடீர் டென்ஷன்!!

Read Time:2 Minute, 22 Second

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் பாடல் காட்சிக்கு நடித்திருந்தார் பிரியா வாரியர். இணைய தளத்தில் இந்த காட்சி பிரபலம் ஆனது. அதில் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் பிரியா. அந்த மகிழ்ச்சியை சிதறடிக்கும் வகையில் பிரியா மீது ஐதராபாத், மும்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படியான பாடல் காட்சியில் நடித்திருக்கும் பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பிரியா உடனடியாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, மேற்கொண்டு புகார் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரியா மீது நடவடிக்கை எடுக்கவும், புகார் பதிவு செய்யவும் தடை விதித்தது. தீர்ப்பை கேட்டு பிரியா மகிழ்ச்சி அடைந்தார். பிறகு இதுகுறித்து அவர் கூறும்போது,’என்னைப்போன்ற வளரும் நடிகைகள் மீது இதுபோன்ற புகார்கள் தருவதால் அவர்களின் தொழில் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற புகாரை எதிர்கொண்டதில்லை. என் மீதும், படம் மீதும் புகார் அளித்தது எனக்கு டென்ஷனை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா!!
Next post மெனோபாஸ் நேரத்தில் சாப்பிட வேண்டியவை!!