ஈரான் நாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி

Read Time:1 Minute, 1 Second

ஈரான் நாட்டில் தலைநகர் டெக்ரானில் 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கட்டிட சொந்தக்காரர் கட்டிட காண்டிராக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கட்டிடம் இடிந்தபோது 20 தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையில் யாரும் காயம் அடைந்த நிலையில் சிக்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக மோப்பநாய்களுடன் மீட்பு குழுவினர் இடிபாடுகளை அகற்றி வந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்த இளைஞருக்கு கத்திகுத்து
Next post இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது