ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!
Read Time:1 Minute, 21 Second
ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார்.
ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், மிகவும் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்துள்ளார் ரகுமான்.
அப்போது குடும்ப நிலை காரணமாக 10ம் வகுப்பு முடிந்ததுமே வேலைக்கு சென்றுள்ளார், சில நாட்கள் கழித்து 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
அவர் அந்த சமயத்திலும் பள்ளிக்கு சரியாக வராத காரணத்தால், ரகுமான் அம்மாவை அழைத்து அந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் ‘உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் ரோட்டிற்கு செல்லுங்கள்.
இந்த பள்ளியில் இவனுக்கு இடமில்லை’ என்று கூறி அனுப்பிவிட்டார்களாம், அன்று தன் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Average Rating