ஊசிமுனை ஓவியங்கள் நெக்லஸ் மாடல் நெக்!!(மகளிர் பக்கம்)
ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியில் நெக்லஸ் மாடல் நெக்கை விதவிதமான கலர் ஸ்டோன் மற்றும் கலர் பீட்ஸை பயன்படுத்தி தோழி வாசகர்களுக்காக வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் அனுராதா.
தேவையான பொருட்கள்
ப்ளவுஸ் பிட், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண திலக் ஸ்டோன், வெள்ளை ரவுண்ட் ஸ்டோன், செயின் ஸ்டோன், கோல்ட் மற்றும் பச்சை நிற பீட்ஸ், கோல்ட் மற்றும் பச்சை வண்ண ஷர்தோஷி, கோல்டன் ஷரி நூல், ஊதா வண்ண எம்ராய்டிங் நூல், டிவைன் நூல், மெல்லிய ஆரி வயர், கம், கட்டர், ஸ்டாண்டுடன்
உட் ஃபிரேம்.
செய்முறை…
கழுத்துப் பகுதியில் தேவையான டிசைனை வரையவும்.
கழுத்து வளைவில் கம் தடவி டிவைன் நூலை இரண்டாக மடித்து ஒட்டி காய வைக்கவும்.
ஊதா நிற எம்ராய்டிங் நூலை ஷரி ஊசியில் இரண்டாகக் கோர்த்து டிவைன் நூல் வெளியில் தெரியாமல் கிராஸ் தையலிட்டு மறைக்கவும்.
கோல்டன் ஷரி நூலை ஆரி ஊசியில் கோர்த்து ஊதா வண்ண நிற அடர்த்திக்கு அருகில்
சங்கிலித் தையலிடவும்.
பச்சை நிற ஷர்தோசியினை சிறுசிறு
துண்டாக கட் செய்து ஷரி ஊசியில் கோர்த்து ஊதா நிற அடர்த்தியின் மறுபக்கம்
கோர்க்கவும்.
கம் தடவி வொயிட் ஸ்டோனை ஒட்டி காய வைக்கவும்.
ஆரி வயரில் கோல்டன் பீட்ஸை கோர்த்து ஸ்டோனை சுற்றி இணைக்கவும்.
துண்டாக வெட்டிய கோல்டன் ஷர்தோஷியினை அடுத்த
லேயராக இணைக்கவும்.
பச்சை நிற ஷர்தோஷியினை அதே முறையில் கோர்க்கவும்
கோல்டன் மற்றும் பச்சை நிற
பீட்ஸை படத்தில் காட்டிய வடிவில்
இணைக்கவும்.
கோல்ட் மற்றும் க்ரீன் பீட்ஸை படத்தில் காட்டியதுபோல் வரிசையாக கோர்க்கவும்.
கம்மை தடவி ஒயிட் திலக்கை ஒட்டி காய வைக்கவும்.
சிவப்பு வண்ண திலக் ஸ்டோனை ஒட்டி அடுத்த வரிசையில் செயின் ஸ்டோனை சேர்க்கவும்.
இறுதி வரிசையில் கோல்டன் மற்றும் க்ரீன் பீட்ஸை கோர்த்து படத்தில் உள்ளதுபோல் சேர்க்கவும்.
கோல்டன் ஷர்தோஷியினை சுற்றி இணைக்கவும்.
செயின் ஸ்டோனை கம் தடவி ஒட்டி வயரால் தைத்து இணைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளதுபோல் நெக்லஸ் நெக் மாடல் ப்ளவுஸ் தயார். இந்த ஜாக்கெட்டை வடிவமைக்க எடுத்துக் கொள்ளும் நுணுக்கமான வேலை நேரத்தைப் பொறுத்து 2500 வரை விலை நிர்ணயம் செய்யலாம்
Average Rating