பிருத்வி – 2 ஏவுகணை இரவில் ஏவி சோதனை!!
Read Time:1 Minute, 0 Second
பிருத்வி -2 அணு ஏவுகணை இரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அக்னி-5, இம்மாதம் அக்னி-1, 20ம் தேதி அக்னி-2 ஆகியவை வெற்றிகரமாக ஏவி சோதனையிடப்பட்டது. இதே போன்று இம்மாதம் 7ம் தேதி பிருத்வி- 2 ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மிக நவீனமான 500 முதல் 1,000 கிலோ எடையுள்ள அணுகுண்டை தாங்கி செல்லும் பிருத்வி- 2 ஏவுகணையை இரவில் ஏவி நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நகரும் ஏவுதளம் மூலம் நேற்று இரவு 8.30 மணி அளவில் இது செலுத்தி சோதனை செய்யப்பட்டது.
Average Rating