புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!!
Read Time:1 Minute, 10 Second
கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ப.தனுசன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21) மாலை கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி முச்சக்கர வண்டியில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதுடன், பின்னர் அவர் காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று (22) காலை புதுமுறிப்புக் குளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் விபத்தா தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating