பெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா!!

Read Time:1 Minute, 37 Second

சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இரண்டே மணி நேரத்தில் செல்லும் அதிவேக ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. தற்போது பெய்ஜிங் – நியூயார்க் இடையே 14 மணி நேரம் விமான பயணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிவேகமாக செல்லக்கூடிய ஹைபர் சோனிக் விமான சோதனையை சீனா சமீபத்தில் நடத்தியது. ஹைபர் சோனிக் விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. தற்போது நடத்தப்பட்ட சோதனையின் போது சீனாவின் ஹைபர் சோனிக் விமானம் மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் பறந்து சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் படி தற்போது பெய்ஜிங் – நியூயார்க் இடையே நடைபெற்று வரும் 14 மணி நேர விமானப் பயணமானது, 2 மணி நேரமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விமான பயணத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பெய்ஜிங் – நியூயார்க் செல்ல இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!!
Next post வளரும் நடிகைகள் மீது புகார் தருவதா? கண்ணடித்த நடிகை திடீர் டென்ஷன்!!