ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!!

Read Time:1 Minute, 18 Second

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இதற்காக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், அஜித் பி பெரேரா ஆகியோரை இக்குழுவில் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரே இக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றுவார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஊழல் மற்றும் மோசடியை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க சமர்ப்பித்த அறிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவித்ரி வாழ்க்கை படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா !!
Next post தொடர்ந்து நடிக்க ரெடி : பாவனா !!