மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு குற்றச்சாட்டு!

Read Time:2 Minute, 56 Second

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சமீபத்தில் சிம்பு – ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு அளித்த விளக்கம் வருமாறு,

நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம்.

ஆனால் அதை செய்யாமல் மணிரத்னம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தினமும் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று படத் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உடன் பேசி அவர்களிடம் விளக்கிவிட்டேன்.

படம் ரிலீசாகி 6 மாதத்திற்கு பிறகு என்மீது குற்றம் சுமத்துகிறார்கள். அது யாருடைய தூண்டுதலின் பேரில் செய்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது தனிப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதனை நடிகர் சங்கத்தில் தான் முறையிட வேண்டும். எனது பதிலை நான் நடிகர் சங்கத்திடம் தெரிவித்துவிட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பிரகாஷ்ராஜிடமும் இதுகுறித்து நான் விளக்கிவிட்டேன் என்று கூறினார்.

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும்!
Next post ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?