ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்!!

Read Time:4 Minute, 4 Second

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு கவர்ந்திழுப்பதற்காக, அதிபர் புடின் தரப்பில் படுபயங்கரமான கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்போதைய அதிபர் புடினே இத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவது என்பது 99.9 சதவீதம் உறுதியாக உள்ளது. ஏனெனில், எதிர்த்து நிற்க சரியான ஆட்கள் யாரும் இல்லை. ஆனால், போட்டியில்லாமல் தான் வென்றால், அது தன் புகழுக்கு இழுக்கு என்பதுபோல் புடின் கருதுகிறார். இதனால் தேர்தலில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு ஓட்டளித்து தான் வெற்றி பெற்றதை போல் காண்பிக்க வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக உள்ளார்.

இதனால், வாக்காளர்களை கவர்ந்திழுக்க அவர் படுபயங்கர கவர்ச்சி விளம்பரங்களில் இறங்கிவிட்டார். ரஷ்யாவில் பெரியவர்கள் அனைவரும் வழக்கமாக ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டுவிடுவார்கள். ஆனால், இளைஞர்கள் மத்தியில் ஒரு சலிப்பு இருப்பதால், அவர்கள் ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை ஓட்டுச்சாவடிக்கு இழுத்தால்தான் அதிக வாக்காளர்களை பதிவு செய்ய முடியும் என்று புடின் நம்புகிறார். இளைஞர்களை கவர்வது, பாலுணர்வு தூண்டும் செயல்கள்தான் என்று யாரோ ஒரு அறிஞர் புடினுக்கு ‘சிறப்பான’ ஆலோசனை அளித்துள்ளார்.

விளைவு, இளைஞர்களை கவரும் வகையில் படுபயங்கரமான கவர்ச்சி விளம்பரங்களை புடினின் கீழ் செயல்படும் தேர்தல் பிரசாரக் குழு செய்து வருகிறது. அதாவது மிக, மிக கவர்ச்சியான உடையில் இளம்பெண்கள், வாக்காளர்களை ஓட்டுபோடச் சொல்லி வலியுறுத்துவது, இளைஞனை முத்தமிட்டு ஓட்டு போடச் சொல்வது என்று அவர்கள் விளம்பர யுக்தி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. உச்சக்கட்டமாக, ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளம் வாலிபர் ஒருவரிடம் வரும் பெண் பாலியல் மோகத்தில் அவரை முத்தமிடுகிறார். பின்னர், நீ ஓட்டு போட்டியா என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன், இல்லை என்று பதில் அளிக்கிறார்.

அப்படியானால், நீ வயசுக்கு வரவில்லை என்றுதான் அர்த்தம். மேட்டர் எல்லாம் கிடையாது, போய்யா… என்று கூறிவிட்டு வெளியேறுகிறார். இன்னொரு விளம்பரத்தில், உங்கள் ஓட்டு வேண்டும், வாக்குச்சீட்டை அவிழ்க்க உதவுவீர்களா என்று கேட்டபடி ஒரு டூபீசில் இருக்கும் ஒரு இளம்பெண் தன் பிராவை கழட்டுவது போன்று கையை வைத்துள்ளார். இப்படி குண்டக்க, மண்டக்க புடின் அணியின் விளம்பரம் செல்கிறது. இந்திய அரசியல்வாதிகள் பணம் ெகாடுப்பது, வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்வது, பிரியாணி, குவாட்டர் தருவது என்ற ரீதியில்தான் உள்ளனர். ஆனால், புடின் தரப்பு ஒரு படி மேலே போய் கவர்ச்சி விளம்பரங்களில் இறங்கிவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!
Next post பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!