சீனாவில் சுரங்க விபத்தில் 21 பேர் பலி
Read Time:57 Second
சீனாவில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வடக்கே உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட திடீர் விபத்தில் ஏராளமான சுரங்க தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டி ருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இந்த விபத்தில் சிக்கி 21 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனம் இன்று தெரிவித்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.
Average Rating