ஓட்டல் பில் கொடுப்பதை தவிர்க்க மாரடைப்பு நாடகம் ஆடிய ஆசாமி
அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் வாகேஷா நகரைச் சேர்ந்த 52 வயது ஆசாமி ஒருவர், மாரடைப்பு நாடகம் ஆடி கைது செய்யப்பட்டார். அவர் சம்பவத்தன்று ஒரு வணிக வளாகத்துக்கு செல்வதற்காக, ஒரு வாடகை காரில் ஏறினார். வணிக வளாகத்தை அடைந்ததும், காருக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக, மாரடைப்பு வந்தது போல நடித்தார். டிரைவர் செய்வதறியாமல், பணம் வாங்காமலே சென்று விட்டார். தனது நடிப்பு வெற்றி பெற்றதை உணர்ந்த அந்த ஆசாமி, வணிக வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டார். 23 டாலருக்கு (ரூ.920) பில் வந்தது. அதை கொடுக்க மனம் இல்லாமல் மீண்டும் மாரடைப்பு நாடகம் ஆடினார். ஆனால் இந்த தடவை அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பார்த்த ஒரு டாக்டர், அவர் ஏற்கனவே இதுபோல் மாரடைப்பு நாடகம் ஆடி பல தடவை ஆஸ்பத்திரிக்கு வந்தவர் என்பதை அடையாளம் காட்டினார். இதையடுத்து அந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 9 மாதம் வரை ஜெயில் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating