ரி56 ரக துப்பாக்கியுடன் அம்பலாங்கொடையில் சிங்களவர் கைது
Read Time:58 Second
விடுதலைப்புலிகளுக்கு உதவிபுரிந்து வருபவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கள நபர் ஒருவர் 56ரகத் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அம்பலாங்கொடைப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது 42வயதுடைய கொட்டலக்ஷ்மன் என்பவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார் ரி56ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 72துப்பாக்கி ரவைகள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating