அல் ஹைடா, ஹிஸ்புல்லாவை விட புலிகள் இயக்கம் பயங்கரமானதென்கிறது அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.
சர்வதேசப் பிரசித்தி பெற்ற அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.ஐ.எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழு (Federal Bureau of Investigation (FBI)அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் ஏனைய பல நாடுகளிலும் அதன் இரகசியப் புலனாய்வு சேவையைச் செய்து வருகிறது. அண்மையில் எவ்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர் உலகில் பயங்கரவாதம் நிலவிவரும் பல நாடுகளிலும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றி மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளின் பின்னர் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களையும் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது. அரசியற் தலைவர்கள் பிரமுகர்களின் கொலைகள் மற்றும் புலிகள் அமைப்பின் கரும்புலிகள், தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைத் தாக்குதல்கள் பற்றி விசேடமாகத் தெரிவித்திருக்கும் எவ்.பி.ஐ. அமைப்பு உலகில் இயங்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளுடன் புலிகள் இயக்கத்தை ஒப்பீடு செய்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளது. சர்வதேசப் புகழ் பெற்ற இந்த எவ்.பி.ஐ. அமைப்பு தெரிவித்திருக்கும் மேற்படி தகவல்களுக்கேற்ப உலகில் இயங்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளில் முதன் முறையாக உலகத்துக்கு பெண் தற்கொலைப் படையினரை அறிமுகப்படுத்தியது புலிகள் இயக்கமே எனவும் இந்த வகையில் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளாகிய ஹிஸ்புல்லா, அல் ஹைடா, ஹமாஸ் அமைப்பு போன்ற பயங்கரவாதக் குழுவினரை விட உலகில் பிரபலம் பெற்றதாக புலிகள் அமைப்பு இருப்பதாகவும் அவ்வாறே உலகில் நாடுகளின் அரசுத் தலைவர்களைக் கொலை செய்யும் பயங்கரவாதச் செயற்பாட்டிலும் புலிகள் இயக்கம் ஏனைய மேற்படி அமைப்புகளை விடப் பிரபலம் பெற்றது எனவும் எவ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இவ்வாறு இதுவரை இரண்டு நாட்டுத் தலைவர்களை புலிகள் இயக்கம் படுகொலை செய்துள்ளதாகவும், மேற்படி சர்வதேச பிரபல பயங்கரவாத அமைப்பு எதுவும் இவ்வாறு நாடுகளின் அரசுத் தலைவர்களைக் கொல்லவில்லை என்றும் மேலும் இந்தப் படுகொலைத் தாக்குதல்களையும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது “கரும்புலிகள்’ தற்கொலைப் பயங்கரவாதிகளைப் பயன்படுத்திச் செய்வித்தார் எனவும் எவ்.பி.ஐ. மேலும் கூறியுள்ளது. இந்தத் தகவல்களை முக்கிய வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
Average Rating