இந்திய டாக்டர்களுக்கு துபையில் கடும் கிராக்கி

Read Time:1 Minute, 59 Second

இந்திய டாக்டர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு துபையில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு துறைகளுக்கு தேவையானவர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்தனர். நர்ஸ்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளுனர், டாக்டர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. அதுவும் குழந்தை மருத்துவம், சிறப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட பிரிவுகளைச் சார்ந்த டாக்டர்களுக்கு மிகுந்த கிராக்கி நிலவுகிறது என்று ஜெட்டாவின் சுகாதார இயக்குநர் சமி முகமது படாவுட் தெரிவித்தார். இந்திய-ஜெட்டா மருத்துவ கூட்டத்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இந்தியாவில் மருத்துவம் பயில 600 சவூதி அரேபியர்கள் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது வரும் ஆண்டுகளில் 6,000 ஆக உயரக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்திய பல்கலை சான்றிதழ்களுக்கு இப்பிராந்தியத்தில் சிறந்த அங்கீகாரம் உள்ளது. இதனால் இந்தியாவில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகக் கிடைப்பதோடு ஊதியமும் அதிகம் கிடைக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் 100வது திரைப்படம்
Next post நெல்லையில் நமீதாவுக்கு கோயில்!