நெல்லையில் நமீதாவுக்கு கோயில்!

Read Time:3 Minute, 32 Second

தமிழ் ரசிகர்களின் நமீதா மோகம் தலை கால் புரியாத அளவுக்குப் போய் விட்டது… அதாவது கோயில் கட்டும் அளவுக்கு. ஏற்கெனவே குஷ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோயில் கட்டி தங்கள் ரசிப்புத் திறனை உலகுக்கே பறைசாற்றியவர்கள் தமிழ் ரசிக மகா ஜனங்கள். அது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் என அகமகிழ்ந்து போனார் குஷ்பு. மூன்று காலப் பூஜையெல்லாம் கூடச் செய்தார்கள். கோயிலுக்கு நேரில் வாங்க தெய்வமே, என ரசிகர்கள் வைத்த கோரிக்கையை மட்டும் கவனமாக நிராகரித்து விட்டார் குஷ்பு (காணிக்கை தராத வெத்துக் கோயிலுக்குப் போறதுல என்ன லாபம்?!). இப்போது கவர்ச்சி வெடிகுண்டு நமீதா முறை. ஏற்கெனவே இவருக்குக் கோயில் கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் ‘என்கு கோயில் வேணாம்.. நெஞ்லே எடம் கொட்த்தா போதும்…’ எனக் ‘கொஞ்சி’க் கேட்டுக் கொண்டாராம் நமீ. அதனால் பொறுத்திருந்தார்கள். ஆனால் ஜகன்மோகினி ஸ்டில்களைப் பார்த்திலிருந்து மோகினி பிடித்ததுபோலவே ஆட ஆரம்பித்துவிட்டார்கள் நெல்லையைச் சேர்ந்த சில ரசிக சிகாமணிகள். ஜகன்மோகினி நமீதா ரசிகர் மன்றம் எனும் பெயரில் கிளை ஆரம்பித்துள்ள இந்த ரசிகர்கள், நெல்லைக்கு அருகே நமீதாவுக்கு கோயிலொன்றைக் கட்டி வருகிறார்களாம். நமீதாவை வைத்தே அதைத் திறக்கும் திட்டமாம். அப்படி அவர் வராவிட்டால் பெரிய சாமியார் யாரையாவது வைத்து கும்பாபிஷேகம் நடத்தும் ஐடியா இருக்கிறதாம் (அட, தமாசு இல்லீங்க… நிஜமாவே நம்மாளுங்க இப்படியெல்லாம் திட்டம் போட்டிருக்காங்க. கோயில் கட்டுமளவுக்குப் போனவங்க இதைச் செய்யமாட்டாங்களா…!). சரி… அந்தக் கோயில் எங்கேதான் கட்டப்பட்டிருக்கிறது, என்பதைத் தெரிந்து கொள்ள நமீதா ரசிகர் மன்றத் தலைவர் செல்வத்தைத் தொடர்பு கொண்டோம். அய்யோ… இந்தச் செய்தி வெளியானதிலிருந்து நிறைய போன் கால்கள். எங்க ஊரிலும் ஒரு கோயில் கட்டணும், அனுமதி கொடுங்கன்னு (அடப் பாவிகளா…!!). மேடம்தான் கஷ்டப்பட்டு தடுத்து வெச்சிருக்காங்க. ஏற்கெனவே கோயில் கட்ட அடிக்கல் நாட்டிட்டாங்க நெல்லைல. ஜோனி என்ற ரசிகர்தான் இந்தப் பணியை ஆரம்பித்தார். நாங்கதான் வேணாம்னு சொல்லி வந்தோம். இப்ப எங்களையும் மீறி, அளவு கடந்த அன்பில் இப்படி கட்டிட்டாங்கன்னு நினைக்கிறேன். இன்னும் முழு விவரமும் தெரியல… என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய டாக்டர்களுக்கு துபையில் கடும் கிராக்கி
Next post இலங்கை அணியின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸஷுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு!