செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற சன்னி லியோன் !!

Read Time:2 Minute, 41 Second

கவர்ச்சி படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தவர் சன்னி லியோன். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லைலா மை லைலா’ பாடல் பலரது தூக்கத்தை கெடுத்து பரிதவிக்க வைத்தது. சன்னி லியோன் – டேனியல் வெப்பர் தம்பதியருக்கு குழந்தைகள் பிறக்காததால் கடந்த ஆண்டு இவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகின்றனர்.

இருப்பினும், மரபியல் வழியாக தங்களுக்கென்று வாரிசு இல்லையே என்ற ஏக்கம் சன்னி லியோனின் மனதில் குடிகொண்டிருந்தது. இந்த ஏக்கத்தை போக்குவதற்கு வாடகை தாயாக குழந்தையை பிரசவித்துத்தர ஒரு பெண் முன்வந்தார்.

இதையடுத்து, சன்னி லியோனின் கரு முட்டையும், டேனியல் வெப்பரின் விந்தணுவும் மருத்துவ ரீதியாக செயற்கை முறையில் செறிவூட்டப்பட்டு அந்த வாடகைத்தாயின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. இந்த கரு முழுமையாக வளர்ச்சியடைந்த பின்னர் சமீபத்தில் அந்த பெண்ணுக்கு சில வாரங்களுக்கு முன்னர் பிரசவம் நடந்தது.

ஒரு குழந்தைக்கு ஏங்கிய சன்னி லியோன் தம்பதியருக்கு ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகளை அவர் பெற்றெடுத்து தந்தார். அவை இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதில் சன்னி லியோன் தம்பதியர் பூரிப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளனர்.

ஆஷெர் சிங் வெப்பர் மற்றும் நோவா சிங் வெப்பர் என்று தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ள சன்னி லியோன் இவர்களின் வருகையால் தங்களது குடும்பம் தற்போது முழுமையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தத்தெடுத்த பெண் குழந்தையுடன், தங்களது வாரிசும், புதிய வரவுமான இரட்டை குழந்தைகளுடன் சன்னி லியோனும் அவரது கணவரும் காணப்படும் புதிய புகைப்படம் ஒன்றையும் தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர்!!
Next post அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி தென்கொரிய குழு வடகொரியா சென்றது!!