ஊரடங்கு சட்டத்தை காலை 10 மணியுடன் தளர்த்த முடிவு!!

Read Time:2 Minute, 26 Second

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று (08) மாலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (08) காலை 10 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய காலை 10 மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

பொது மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் விநியோகிப்பதற்குமான கால அவகாசத்தை வழங்கும் பொருட்டு கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தை தளர்த்துமாறு பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையை கவனத்தில் கொண்டு தற்பொழுது நடைமுறையிலுள்ள ஊரடங்குச்சட்டத்தை இன்று (08) காலை 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் இன்று (08) மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்துவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று (08) காலை 10.00 மணியிலிருந்து இன்று மாலை 6.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோவினால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த காலத்தை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் பெருமை உணர்வோம் – இன்று சர்வதேச மகளிர் தினம்!
Next post இந்தோனேஷியாவில் சிகரெட் பிடிக்கும் உராங்குட்டான் குரங்கு!!