முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு!

Read Time:1 Minute, 21 Second

முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர். பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர். இந்த மோதலில் ஒரு புலி உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் புலிகளின் தகவல் தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் எவருக்கும் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அணியின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸஷுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு!
Next post அரசை எதிர்த்து வாக்களிப்போம்- வைகோ