கோவை வந்த இயக்குநர் சேரன் சூட்கேஸில் கட்டுக் கட்டாக பணம்!

Read Time:3 Minute, 6 Second

கோவைக்கு விமானத்தில் வந்த இயக்குநர் சேரனின் சூட்கேஸில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின்னர் பணத்தை சேரனிடம் ஒப்படைத்தனர். இயக்குநர் சேரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் “பொக்கிஷம்”. இப்படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கோபிச் செட்டிப் பாளையத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்காக கோவைக்கு தனியார் விமானம் மூலம் வந்தார். நேற்று இரவு ஏழரை மணியளவில் விமானம் கோவையை வந்தடைந்தது. அப்போது அங்கு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவினர் திபுதிபுவென வந்தனர். விமான பயணிகளின் சூட்கேஸ்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். சேரன் கொண்டு வந்திருந்த சூட்கேஸையும் சோதனையிட்டனர்.அப்போது அதில், 1000 ரூபாய் கட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்தன. மொத்தம் ரூ. 15 லட்சம் பணம் இருந்தது. இதையடுத்து அந்தசூட்கேஸை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பணத்தை எதற்காக கொண்டு வருகிறீர்கள் என்றுசேரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதற்கு சேரன், படப்பிடிப்பு செலவுகளுக்காக இந்தப் பணத்தைக் கொண்டு செல்வதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்களையும் அவர் காட்டினார். மேலும் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகவும் அளித்தார். இதையடுத்து சேரனிடம் பணத்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த திடீர் சோதனை மற்றும் விசாரணையால் சேரன் அப்செட் ஆகி விட்டார். பின்னர் சூட்கேஸுடன் அவர் கோபி கிளம்பிச் சென்றார். சென்னை விமான நிலையத்திலேயே சேரனின் சூட்கேஸில் பணம் இருந்ததை அதிகாரிகள் ஸ்கேனிங் மூலம் கண்டுபிடித்து விட்டனர். இருப்பினும் அவரது பயணம் தடைபடக் கூடாது என்பதற்காக அவரை நிறுத்தாமல் விட்டு விட்டனர். உடனடியாக கோவை வருமான வரித்துறையினருக்குத் தகவல் அளித்து கோவையில் சோதனை மற்றும் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. சேரனின் விளக்கம் திருப்திகரமாக இருந்ததால் அவரை பணத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்