அதிரடிப்படை உறுப்பினர் கிளைமோரில் சிக்கி பலி

Read Time:1 Minute, 10 Second

பொத்துவில் மொனராகலை பிரதான வீதியில் செங்காமம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விஷேட அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்தனர் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் இறந்ததை உறுதி செய்த படைத்தரப்பு வேறு எவரும் காயமடையவில்லை என்று கூறுகிறது கிளைமோர் வெடித்ததையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தினர் எனினும் எவரும் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் ஆவேசம்
Next post ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானத்தை ரஷியா-சீனா முறியடித்தது