சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் ஆவேசம்
சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் அல் பஷீர் ஆவேசமாக இந்த புகாரை மறுத்துள்ளார். சூடானில் உள்ள டார்பர் பகுதியில் இனப் படுகொலை நடைபெற்று பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹாலந்து நாட்டில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் சூடான் அதிபர் உமர் அல் பஷீர் மீது குற்றம் சாட்டியது. டாபரில் உள்ள ஆப்பிரிக்க இனக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தோடு படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகளுக்கு அவர் உத்தரவிட்டதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர் மீது சர்வதேச நீதிமன்றம் இத்தகைய குற்றச்சாட்டுக்களை கூறுவது இதுவே முதல் முறையாகும். எனினும் சூடான் அரசு இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கிலானது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சூடான் அதிபரும் இந்த குற்றச்சாட்டுக்களை ஆவேசமாக மறுத்துள்ளார்.
Average Rating